காடுகள்.காம்

காடுகள் மற்றும் காடுகளின் வகைகளை பற்றியும் , மனிதர்கள் உயிர் வாழ காடுகள் ஆதாரமாக விளங்குவது எவ்வாறு என்பதையும் , காடுகளினால் மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உண்டாகும் நன்மைகளையும் மற்றும் நமது காடுகள் எங்கெல்லாம் உள்ளது என்ற தகவல்களையும் தமிழில் வழங்கும் பெட்டகம்

நிறுவனர் மற்றும் நோக்கம்

சமூ௧ சேவகர் ச.ஆசைதமிழ் அவர்களால் இயக்கப்படும் இந்த இணையதளம் , மனிதர்கள் வாழ காடுகள் மற்றும் காட்டுயிர்களின்  இருப்பு எவ்வாறு அவசியமாகிறது என்பதை அனைவருக்கும் எடுத்துரைக்௧ வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்துடன் , வாழும் தலைமுறை மற்றும் எதிர்கால தலைமுறையின் நலனிற்க்காகவும் உருவாக்கப்பட்டது …

உயிரினங்கள்

உலகில் வாழும் அனைத்து உயிரினங்களை பற்றியும் , காட்டுயிரினங்கள் வாழ்வு மனித வாழ்க்கைக்கு ஆணிவேராக அமைவது எவ்வாறு என்பதையும் , மனிதர்களுக்கும் காட்டு உயிரிகளுக்கும் இடையேயான தொடர்புகளையும் , காட்டு உயிரினங்களால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகளையும் தமிழில் வழங்கும் இணையதளம்

குழந்தைகளும் காடுகளும்

நமது எதிர்கால தலைமுறையினரான குழந்தை செல்வங்களுக்கு இயற்கையை பற்றியும் , இயற்கையால் அவர்கள் பெற உள்ள எண்ணிலடங்கா பயன்களையும் , இயற்கை வளங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது பற்றிய அனைத்து தகவல்களையும் தமிழில் வழங்கும் பெட்டகமே காடுகள் இணையதளம்

காடுகள்.காம் இணையதளம் சூழல் வணக்கம்

கூறி உங்களை அன்புடன் வரவேற்கிறது

உலகில் மனிதன் மட்டும் தனித்து வாழ முடியாது , இயற்கை படைத்த பிற உயிர்களோடும் சேர்ந்தே வாழவேண்டும் என்பது ௮வசியம் என கூறுவது ஏன் ?

மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது , தமிழில் வனம், கானகம், அடவி, புறவு, பொதும்பு போன்ற பல  சொற்களால் இது குறிக்கப்படுகிறது , காடுகள் என்பது வெறும்  மரங்கள் மட்டும் கொண்டதல்ல  ,   உயிர் பரவலின் கருவறை ..!

பூமியின் நிலப்பரப்பில் பெரும் பகுதி காடாகவும் , பல்லுயிர்கள்  வாழும் வீடாகவும் இருந்தன என்பது தான் பூமியின் தொன்மை  வரலாறு , காடழிப்பின் காணாது போன உயிர்களின் பட்டியல்  நீளமானது , காடழியும் போது …  உயிர் காக்கும் மூலிகைத தாவரங்களும் , காட்டை நம்பி வாழும் பழங்குடி மக்கள் உள்ளிட்ட  பல்வேறு உயிரினங்களும் அழிகின்றன.

காடுகள் மழையை மட்டுமன்றி நமது மூச்சுக்காற்றையும் சலவை செய்கின்றன ,  இந்தியாவில் காடுகளால் பயன் அடையும் மக்கள்  சுமார் இருபது கோடிப் பேர் என்பதை நினைவில் கொள்வோம்!

சேலம், தருமபுரி, ஈரோடு, திருச்சி, தஞ்சை நகரங்களில் தண்ணீர்த் தேவையை நிறைவேற்றுவது காவேரி தான்!  கோவை , திருப்பூர் மக்களுக்கு பவானியும் ,  அமராவதியும் ,  சிறுவாணியும் தான் நீராதாரம் , மதுரையை வைகையும் ,  நெல்லையை தாமிரபரணியும் ஈரம் உலராமல் வைத்திருக்கின்றன ,  இந்த ஆறுகள் இல்லாது போனால் …தமிழகம் பாலையாய் தகிக்க நேரும்.

ஆறுகள் அனைத்தும் மேற்கு மலைத் தொடர்களில் உற்பத்தியாகி  சமவெளி மக்களுக்கு சோறும் , நீரும் தருகின்றன , இன்னும்  மிச்சமிருக்கும் மழைக்காடுகளை காப்பாற்றினால் தான் ஆறுகளைக் காப்பாற்ற முடியும்!

பூமியில் உயிர்கள் தோன்றி தோராயமாய் ஓராண்டுகள் என கணக்கிட்டால் மனிதன் தோன்றி வெறும் இரண்டு நிமிடங்கள்  தான் என்கிறார்கள் இயற்கைவியலாளர்கள். உலகில் மனிதன் மட்டும் தனித்து வாழ முடியாது! இயற்கை படைத்த பிற  உயிர்களோடும்  சேர்ந்தே  வாழ வேண்டும்!

காடுகளும், காட்டுயிர்களும் இல்லாத உலகில் மனிதனும் இருக்க  மாட்டான்! காடுகளையும், காட்டுயிர்களையும் பாதுகாக்கும்  கரிசனத்தோடு உலகெங்கும் உள்ள மக்கள் அதை அடுத்த     தலைமுறைக்கும் பாதுகாத்து கொடுக்க வேண்டும் , எனவே  அதைப்பற்றி தகவல்களை நம்மைச்              சுற்றியுள்ள உயிர்களை  தமிழில் கொடுப்பதற்கான தகவல் பெட்டகமே இந்த இணையதளம்.

காடுகள்.காம் உலகின் செம்மொழியாம் தமிழில் இயங்கும் சூழலியல் தகவல் பெட்டகம்

காடுகளும், காட்டுயிர்களும் இல்லாத உலகில் மனிதனும் இருக்க  மாட்டான்! காடுகளையும், காட்டுயிர்களையும் பாதுகாக்கும்  கரிசனத்தோடு உலகெங்கும் உள்ள மக்கள் அதை அடுத்த     தலைமுறைக்கும் பாதுகாத்து கொடுக்க வேண்டும் , எனவே  அதைப்பற்றி தகவல்களை நம்மைச் சுற்றியுள்ள உயிர்களை  தமிழில் கொடுப்பதற்கான தகவல் பெட்டகமே இந்த இணையதளம்.