New blog posts

அழிவின் விளிம்பில் காட்டின் பேருயிர்

2 June, 2020 by Administrator

அழிவின் விளிம்பில் காட்டின் பேருயிர்...

ஜுன் - 5 சுற்றுச்சூழல் தின கட்டுரைகள் அனுப்புவதற்கான விதிமுறைகள்

26 May, 2020 by Administrator

ஜுன் - 5 சுற்றுச்சூழல் தின கட்டுரைகள்...

Corona Awareness
Corona Awareness

28 March, 2020 by Administrator

www.kaadugal.com - Corona Awareness Image

World Water Day
World Water Day

22 March, 2020 by Administrator

www.kaadugal.com - World Water Day Post

தருமபுரி தமிழர் மரபுச் சந்தையில் , சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

12 January, 2020 by Administrator

தர்மபுரி மக்கள் மன்றம் & தருமபுரி கலை...

ஆணைமலையும் யானைகளும்

11 August, 2019 by Administrator

திரு.K.தங்கராஜ் உடுமலைப்பேட்டை , அவர்களின்...

Ram Surendhar Image

31 July, 2019 by Aasaitamil

உலக புலிகள் தினம்

30 July, 2019 by Aasaitamil

உலக புலிகள் தின பதிவு

காடுகள் இணையதளத்தில் உறுப்பினராக ௮ழைப்பு

20 March, 2019 by Administrator

காடுகள் இணையதளத்தில் உறுப்பினராகி தாங்கள்...

காடுகள் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

20 March, 2019 by Administrator

காடுகள் இணையதளத்தை பார்வையிட...

காடுகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது

26 February, 2019 by Aasaitamil

காடுகள் இணையதளத்தை பார்வையிட வந்திருக்கும்...

View all blog entries →

நமது குறிக்கோள்

உலகில் மனிதன் மட்டும் தனித்து வாழ முடியாது!

இயற்கை படைத்த பிற உயிர்களோடும் சேர்ந்தே வாழவேண்டும்!

காடுகளும், காட்டுயிர்களும் இல்லாத உலகில் மனிதனும் இருக்க மாட்டான்!

 காடுகளையும், காட்டுயிர்களையும் பாதுகாக்கும் கரிசனத்தோடு

உலகெங்கும் உள்ள மக்கள் அதை அடுத்த தலைமுறைக்கும் பாதுகாத்து கொடுக்க வேண்டும்.


 

சதுப்பு நில காடுகள்

அலையாத்தி காடுகள் (லகூன்)

 

திருவாரூர் மாவட்டம் , பட்டுக்கோட்டை அருகிலுள்ள முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி காடுகள் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய சதுப்பு நிலக்காடுகளாகும் . 

ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் சேறு கலந்த சதுப்பு நிலங்களில் அலையாத்தி காடுகள் வளர்கின்றன , கோரையாறு , பாமணி ஆறு , வளவனாறு , கிளைதாங்கி ஆறு , நசுவினி ஆறு , பாட்டுவனாச்சி ஆறு , கண்டபறிச்சான்கோரையாறு , மரைக்காகோரையாறு ஆகிய ஆறுகள் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடலில் கலக்கும் ஆழமற்ற பகுதி லகூன் எனப்படுகிறது .

இங்கு வளரும் காடுகள் தான் அலையாத்தி காடுகள் , கழுதை முள்ளி , நரிக்கண்டல் , வெண்கடல் , பன்னுக்குத்தி , கருங்கண்டல் , சிறுகண்டல் , தில்லை , திப்பரந்தை , நெட்டை , சுரப்புன்னை , குட்டை சுரப்புன்னை , மலட்டு சுரப்புன்னை , சோமுந்திரி , சோனரேசியா எபிடெலா உள்ளிட்ட மரங்கள் வளர்கின்றன .

சாம்பல் நிறத்தில் இருக்கும் இம்மரங்கள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை பூக்கும் தன்மை கொண்டவை , வேர்கள் மூலம் சுவாசிக்கும் தன்மையுடைய அவி , சென்னியா , மெனரனா எனப்படும் தாவரம் முத்துப்பேட்டையில் உள்ள இந்த சதுப்பு நில காடுகளில்தான் உள்ளது , புவியியல் அமைப்பில் முக்கியமான ஈரப் பத நிலப்பகுதியாக முத்துபேட்டை அலையாத்தி காடுகள் குறிப்பிடப்படுகின்றன .

நாட்டில் உள்ள அலையாத்தி காடுகளில் 61 சதவீத காடுகள் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை , தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதிகளை உள்ளடக்கிய லகூன் பகுதியில் 29,713 ஏக்கரில் பரந்துவிரிந்துள்ளது .

அலையாத்தி காடுகளை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள், முத்துப்பேட்டை , ஜாம்புவானோடை போன்ற பகுதிகளில் இருந்து மீனவர்களின் படகு மூலம்தான் சென்று சுற்றிப்பார்க்க வேண்டும் .  

7 கிலோ மீட்டர் தொலைவு ஆற்றில் செல்லும்போது இருபுறமும் இருக்கும் அலையாத்தி காடுகள் கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கும் , பார்வை கோபுரங்களில் ஏறி லகூன் அழகை காணலாம் , யாழ்பாணத்தான்கோரி , சீப் கார்னர் , செல்லிமுனை பார்வை கோபுரங்கள் , நடுவாய்க்கால் , உப்புத்தோட்டம் , வவ்வால் தோட்டம் ஆகியவை பார்க்க வேண்டிய இடங்கள் .

ஓவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரையில் அதிக எண்ணிக்கையிலானப் பறவைகள் இந்த பகுதிக்கு வருகின்றன , இப்பறவைகள் சைபீரியா , மத்திய ஆசியா , ரஷ்யாவின் வடபகுதி மற்றும் ஐரோப்பா போன்ற உலகின் பல பகுதிகளில் இருந்து வருகின்றன , மேலும் பூநாரை ,செங்கால் நாரை, சிறவி , நீர்க்காகம் போன்ற நீர்ப் பறவைகளைக் குறிப்பிடலாம் .

கொக்கு, மீன்கொத்தி, நாரை போன்ற அழியும் தறுவாயில் உள்ள நீர்ப்பறவைகள் இப்பகுதியில் நிலையாக வசிக்கின்றன.

முத்துப்பேட்டை நில பறவைகளான பருந்து , சிவப்பு வளைய பச்சைக் கிளிகள் மற்றும் புள்ளி புறா வகைகள் உள்ளன .

முத்துப் பேட்டை சதுப்பு நிலக்காடுகளில் பாலுட்டி வகைகளான காட்டுப் பூனைகள் , குறுகிய மூக்கு உள்ள பூசந்தின்னி வெளவ்வால்கள் காணப்படுகின்றன , கீப் கார்னர் செல்லி முனை , லகடன் கடல் முகத்துவாரம் சேத்குடா உப்புத் தேரோட்டம் ஆகியன இங்குள்ள அழகுமிகு பகுதிகள் .

சுனாமி பேரலையில் இருந்து முத்துப்பேட்டையை காப்பாற்றியது அலையாத்தி காடுகள்தான் , திருவாரூர் மாவட்டத்தை இயற்கை கீற்றங்களில் இருந்து காக்க கூடிய அரணாகவும் அலையாத்திக் காடுகள் உள்ளன .

சாம்புவானோடை படகு துறையில் இருந்து இருபுறமும் அலையாத்தி மரங்களை கொண்ட நீர்ப் பாதையில் சுமார் 6கீ.மீ தூரத்தை கடந்தால் கடல் முகத்துவாரத்தைக் காணமுடியும் , இப்பாதையில் ஏராளமான திட்டுகள் குட்டித் தீவுகளாகக் காட்சி அளிப்பது அழகு .

சதுப்பு நிலக் காடுகளின் அழகைக் காண வரும் சுற்றுலா பயணிகள் தங்கி இளைப்பாற ஓய்விடங்கள் அமைக்கப்பட்டுள்ளன , இங்கு 162 மீட்டர் நீளத்திற்கு மரத்திலான நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன , இது போன்ற அமைப்பு வேறு எந்த சதுப்பு நிலக் காடுகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது , இது தவிர ஓய்விடத்திலிருந்து சதுப்பு நிலக் காடுகளைக் காணும் வகையில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன .

போக்குவரத்து வசதி

முத்துப்பேட்டையிலிருந்து  தஞ்சாவூர் 65 கீ.மீ. தொலைவிலும் , திருவாரூர் 60 கீ.மீ தொலைவில் நாகப்பட்டினம் 70கீ.மீ தொலைவிலும் அமைந்துள்ளது , இதற்கு அருகில் உள்ள வானூர்தி நிலையம் திருச்சிராப்பள்ளி 130 கீ.மீ ஆகும் , நடுத்தர வசதியுள்ள விடுதிகள் பட்டுக்கோட்டை மற்றும்  முத்துப்பேட்டையிலும் நட்சத்திர விடுதிகள் திருவாரூர் தஞ்சாவூரிலும் அமைந்துள்ளன , இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது .

திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வழியாக பட்டுக்கோட்டை சென்று அங்கிருந்து முத்துப்பேட்டை செல்லலாம் , வேதாரண்யம் ,  நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரிலிருந்தும்  முத்துப்பேட்டை செல்ல பேருந்து வசதிகள் உள்ளன , முத்துப்பேட்டையில் இருந்து லகூன் செல்ல படகு ஒன்றுக்கு (10 பேர் செல்லலாம்) ரூ.800 முதல் 1000 வரை வசூல் செய்யப்படுகிறது .

Comments