New blog posts

அழிவின் விளிம்பில் காட்டின் பேருயிர்

2 June, 2020 by Administrator

அழிவின் விளிம்பில் காட்டின் பேருயிர்...

ஜுன் - 5 சுற்றுச்சூழல் தின கட்டுரைகள் அனுப்புவதற்கான விதிமுறைகள்

26 May, 2020 by Administrator

ஜுன் - 5 சுற்றுச்சூழல் தின கட்டுரைகள்...

Corona Awareness
Corona Awareness

28 March, 2020 by Administrator

www.kaadugal.com - Corona Awareness Image

World Water Day
World Water Day

22 March, 2020 by Administrator

www.kaadugal.com - World Water Day Post

தருமபுரி தமிழர் மரபுச் சந்தையில் , சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

12 January, 2020 by Administrator

தர்மபுரி மக்கள் மன்றம் & தருமபுரி கலை...

ஆணைமலையும் யானைகளும்

11 August, 2019 by Administrator

திரு.K.தங்கராஜ் உடுமலைப்பேட்டை , அவர்களின்...

Ram Surendhar Image

31 July, 2019 by Aasaitamil

உலக புலிகள் தினம்

30 July, 2019 by Aasaitamil

உலக புலிகள் தின பதிவு

காடுகள் இணையதளத்தில் உறுப்பினராக ௮ழைப்பு

20 March, 2019 by Administrator

காடுகள் இணையதளத்தில் உறுப்பினராகி தாங்கள்...

காடுகள் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

20 March, 2019 by Administrator

காடுகள் இணையதளத்தை பார்வையிட...

காடுகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது

26 February, 2019 by Aasaitamil

காடுகள் இணையதளத்தை பார்வையிட வந்திருக்கும்...

View all blog entries →

நமது குறிக்கோள்

உலகில் மனிதன் மட்டும் தனித்து வாழ முடியாது!

இயற்கை படைத்த பிற உயிர்களோடும் சேர்ந்தே வாழவேண்டும்!

காடுகளும், காட்டுயிர்களும் இல்லாத உலகில் மனிதனும் இருக்க மாட்டான்!

 காடுகளையும், காட்டுயிர்களையும் பாதுகாக்கும் கரிசனத்தோடு

உலகெங்கும் உள்ள மக்கள் அதை அடுத்த தலைமுறைக்கும் பாதுகாத்து கொடுக்க வேண்டும்.


 

பொழில்௧ள்

பொழில் என்று ஒரு  அழகான தமிழ் சொல் இருக்கிறது ,
சரி அது பற்றி தெரிந்துக் கொள்ளலாமா ?
 
பொழில் ( Rainforest , மழைக்காடு ) என்பது அதிக மழை பெய்வதால் செழித்து இருக்கும் காடுகளை அப்படி சொல்வாங்க , பொழிதல் என்றால் மழை பெய்தல் என்னும் பொருள்வழியில்  பொழில் என்று மாறிடுச்சு , இச்சொல் இன்றைய அறிவியலில் மழைக்காடுன்னு சொல்லப்படுகிறது.
 
பொதுவாக ஆண்டு மழை பொழிவானது 1750 மில்லி மீட்டருக்கும், 2000 மிமீ க்கும் இடையில் உள்ள காடுகளே மழைக்காடுகள் ஆகும். அதிக மழையும், சூடான தட்பவெப்பமும் உயரமான மரங்களும் கொண்ட பூமத்தியரேகைப் பகுதியில் காணப்படும் காட்டுப் பகுதிகள் இவை .
 
இந்த  மழைக்காடுகள் ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, மத்திய மற்றும் தென் அமெரிக்கப்பகுதிகளில் பரவியுள்ளது. மழைக்காடு பல்லுயிரியித்தில் மிகச் சிறந்தது.
 
இப்பூமியின் பரப்பளவில் இரண்டு பங்குங்கும் குறைவாகவே இருந்தாலும் இவ்வுலகின் ஐம்பதுக்கும் மேற்பட்ட தாவரங்களையும் விலங்குகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் வேறெங்கும் வசிக்காத உயிரினங்கள் பலவற்றை இம்மழைக்காடுகளில் காணலாம்.
 
பூமத்திய ரேகைக்கு அருகாமையில் அமைந்துள்ளதால் அதிக சூரிய ஒளியைப் பெற்று தாவரங்கள் ஒளிச்சேர்க்கையினால் தாவரங்களில் சேமிக்கப்பட்ட அதிகமான  இச்சக்தியே மழைக்காட்டிலுள்ள விலங்குகளுக்கு உணவாக அமைகிறது.
 
அதிக உணவு இருப்பதால் அதிக விலங்குகளும் மழைக்காடுகளில் வாழ்கின்றன , இப்புவியின் உயிர்ச்சூழ்நிலைக்கு மழைக்காடுகளின் சேவை மிகவும் முக்கியமானது , ஏனெனில் மழைக்காடுகள் பலவிதமான தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உறைவிடமாகிறது , உலகின் தட்பவெப்பநிலையை சமப்படுதுகிறது வெள்ளம் , வறட்சி மற்றும் மண்ணரிப்பிலிருந்து பாதுகாக்கிறது. 
 

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆசியாவின் மிக முக்கிய மழைக்காடுகள்:

1)ஹரப்பன் மழைக்காடுகள்
2)சிங்கராஜா மழைக்காடுகள்
3)மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள மழைக்காடுகள்

ஹரப்பன் மழைக்காடுகள்:

இந்த மழைக்காடுகள் 98,555 ஹெக்டேரில் சுமத்ரா,இந்தோனேஷியா ,ஜாம்பி என்று பல தீவுகளில்   விரிந்து கிடக்கிறது. The British Royal Society for the Protection of Birds என்ற அமைப்பு ஒரு மில்லியன் மரங்களை நட்டு இந்த காடுகளை மறு உற்பத்தி செய்துள்ளனர்.ஏனெனில் சுமத்திரா புலி,சுமத்திரா காண்டாமிருகம் போன்ற அழியும் நிலையில் உள்ள 300க்கும் மேற்பட்ட பல உயரினங்கள் இந்த வனத்தில்தான் வசிக்கிறது.


சிங்கராஜா  மழைக்காடுகள்:

சிங்கராஜா வனம் இலங்கையில் அமைந்துள்ள UNESCO –ஆல்  பாதுகாக்கப்படும்  தேசிய வனமாகும். இது இலங்கையின்  தென் மாகாணங்களின் எல்லையில் இரத்தினபுரி, காலி , மாத்தறை மாவட்டங்களில் அமைந்துள்ளது. சிங்கராஜா வனம் கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் தொடக்கம் 1170 மீட்டர் உயரம் கொண்ட மழைக்காடாகும்.


மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள மழைக்காடுகள்


இந்தியாவில் இவ்விதமான மழைக்காடுகள் அடர்ந்து இருப்பது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும்தான்.
மழைக்காடுகள் மிகுந்திருந்த மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள் தேயிலை, காப்பி போன்ற ஓரே வகையான பயிர்த் தோட்டங்களுக்காகவும், நீர்மின் திட்டங்களுக்குகாகவும், மரம் வெட்டும்  தொழிலுக்காகவும் கடந்த சில நூற்றாண்டுகளாக அழிக்கப்பட்டு வருகிறது . இதனால் மழைக்காடுகள் பல இடங்களில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, தொடர்பற்று துண்டுதுண்டாகிப்போனது.
 மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆனைமலைப்பகுதியிலுள்ள வால்பாறையில்  கண்ணுக்கெட்டும் தூரம் வரை பச்சைப்பசேலென தேயிலைத் தோட்டங்களைக் காணலாம்.  காப்பி, தேயிலை, ஏலம், யூக்கலிப்டஸ் போன்ற ஒரே வகையான  தாவரத் தோட்டங்களின் நடுவே இவை பயிரிடத் தகுதியில்லாத இடங்களில் இன்னும் அழிக்கபடாத  மழைக்காடுகள் சிறியதும் பெரியதுமாக ஆங்காங்கே தீவுகளைப் போல காட்சியளிக்கும். இவற்றை  மழைக்காட்டுத்தீவுகள், துண்டுச்சோலை என்றும் அழைக்கின்றனர்.

இத்துண்டுச் சோலைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் வால்பாறையைச் சுற்றிலும் ஆனை மலை புலிகள் காப்பகம், பரம்பிகுளம் புலிகள் காப்பகம், வாழச்சால் வனப்பகுதி, எரவிகுளம் தேசியப் பூங்கா , சின்னார் சரணாலயம் போன்ற இடங்களில்  தொடர்ந்த பரந்து விரிந்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அமைந்துள்ளன. இதனால் சுற்றிலும் வனத்தைக் கொண்ட வால்பாறை பகுதியில்  பலவிதமான அரிய, அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளையும், தாவரங்களையும் பார்க்க முடியும். இந்த உயிரினங்களுக்கெல்லாம் புகலிடமாக இத்துண்டுச் சோலைகள் உள்ளன.

ஒரு மழைக்காட்டு மர விதை முளைத்து, துளிர்விட்டு, நாற்றாகி மரமாக உயர்ந்து வளர்வதற்குள் பலவிதமான இன்னல்களை சந்திக்க நேரிடுகின்றது. வறட்சியிலிருந்தும், நாம் காட்டுக்குள் கொண்டு செல்லும், ஆடு, மாடுகளிடமிருந்தும், அங்கு வாழும் தாவர உண்ணிகளிடமிருந்தும், சூரிய ஒளிக்காக, நீருக்காக அதனைச் சுற்றியுள்ள தாவரங்களிடமிருந்தும், களைச்செடிகளிடமிருந

்தும் எல்லாவற்றிற்கும் மேலாக மரவெட்டியின் கோடாலியிடமிருந்தும் தப்பிக்க வேண்டும். ஒரு மரம், நடப்பட்டத்திலிருந்து 15 மீட்டர் வரை வளர்வதற்கு சுமாராக 12 ஆண்டுகள் பிடிக்கிறது.

இப்புவிக்கும், மனிதக்கும்  தேவையான இப்படிப்பட்ட மழைக்காடுகள் உலகில் எல்லா பகுதிகளிலும் ஒவ்வொரு  வினாடிக்கும்  ஒரு கால் பந்தாட்ட மைதானம் அளவுக்கு  தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன.அன்பு குழந்தைகளே இதை நீங்கள்தான் பாதுகாக்க  வேண்டும்...

தொகுப்பு- ஆற்றல்.பிரவீன்குமார்

 

Comments