New blog posts

ஆணைமலையும் யானைகளும்

11 August, 2019 by Administrator

திரு.K.தங்கராஜ் உடுமலைப்பேட்டை , அவர்களின்...

Ram Surendhar Image

31 July, 2019 by Aasaitamil

View all blog entries →

நமது குறிக்கோள்

உலகில் மனிதன் மட்டும் தனித்து வாழ முடியாது!

இயற்கை படைத்த பிற உயிர்களோடும் சேர்ந்தே வாழவேண்டும்!

காடுகளும், காட்டுயிர்களும் இல்லாத உலகில் மனிதனும் இருக்க மாட்டான்!

 காடுகளையும், காட்டுயிர்களையும் பாதுகாக்கும் கரிசனத்தோடு

உலகெங்கும் உள்ள மக்கள் அதை அடுத்த தலைமுறைக்கும் பாதுகாத்து கொடுக்க வேண்டும்.


 

பழங்குடி மக்கள்

காடுகளை காடுகளாக வைத்திருப்பதில் பழங்குடியினர் பெரும்பங்கு வகிக்கின்றனர் .


பழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டோ பன்னெடுங்காலமாகவோ ( 10,000 ஆண்டுகளுக்கும் மேலாக ) , ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள் .

இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும் மொழியும் நிலமும் கொண்டு அதனைச் சார்ந்த செடி , கொடி , மரம் , விலங்குகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தன்னிறைவோடு வாழ்பவர்கள் .

இவர்கள் தங்களுக்கென தனி கலைகளும் கடவுள் , சமயம் , மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும் கொண்டிருப்பர் .

தனி மனித வாழ்க்கையிலும் , உறவு முறைகளிலும் , குமுகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள் .

தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும் , பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் இல்லாமலும் , தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள் , வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களுமாக இருக்கிறார்கள் .