New blog posts

ஆணைமலையும் யானைகளும்

11 August, 2019 by Administrator

திரு.K.தங்கராஜ் உடுமலைப்பேட்டை , அவர்களின்...

Ram Surendhar Image

31 July, 2019 by Aasaitamil

View all blog entries →

நமது குறிக்கோள்

உலகில் மனிதன் மட்டும் தனித்து வாழ முடியாது!

இயற்கை படைத்த பிற உயிர்களோடும் சேர்ந்தே வாழவேண்டும்!

காடுகளும், காட்டுயிர்களும் இல்லாத உலகில் மனிதனும் இருக்க மாட்டான்!

 காடுகளையும், காட்டுயிர்களையும் பாதுகாக்கும் கரிசனத்தோடு

உலகெங்கும் உள்ள மக்கள் அதை அடுத்த தலைமுறைக்கும் பாதுகாத்து கொடுக்க வேண்டும்.


 

மன்னார் வளைகுடா

மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் (Mannar biosphere reserve):

 ராமேஸ்வரம் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற உயிர்க்கோளக் காப்பகம ஆகும். தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் என்ற பெருமை கொண்டது. தமிழ்நாட்டின் தென்கடற்கரையில் மன்னார்வளைகுடா தேசியப்பூங்காவை உள்ளடக்கி சுமார் 10,500 ச.கி.மீட்டரில் பரவியுள்ள இக்காப்பகம் இந்தியாவின் முதல் கடல்சார்ந்த காப்பகமாக 1989ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

தாவரங்கள்    :

வெப்பமண்டல அகன்ற இலைக்காடுகள் இங்கு காணப்படுகின்றன.[2] இக்காப்பகத்தில் கண்டறியப்பட்டுள்ள 160 பாசியினங்களில் 30 கடல்பாசியினங்கள் உணவாக பயன்படுகின்றன. இங்கு மிகுந்து காணப்படும் கடற் புற்கள் கடல்வாழ் பாலூட்டிகளுக்கு உணவளிக்கின்றன. கண்டல் மரவகைகள் மிகுந்து காணப்படும் இக்காப்பகத்தில் 46 தாவர இனங்கள் இவ்விடத்திற்கே உரித்தானவையாகும்.

விலங்குகள்    
தொகு
மன்னார் வளைகுடாப்பகுதியில் காணப்படும் அழகான பவழப்பாறைகள், பல கடல் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உறைவிடமாக திகழ்கிறது. இந்த உயிர்கோளக் காப்பகத்தில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரிய வகை உயிரினங்கள் உள்ளன. குறிப்பாகப் பாலூட்டி இனங்களைச் சேர்ந்த ஆவுளியாவும் (Dugong)[3], ஓங்கில்களும் (டால்பின்) இப்பகுதியில் காணப்படுகின்றன. இந்தியக் கடல் பகுதியிலேயே இரண்டாயிரத்துக்கும் அதிகமான மீன் வகைகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில்தான் உள்ளன. முத்துக்கள் விளையும் சிப்பிகள், இறால் வகைகள், கடல் செவ்வந்தி, கிளிஞ்சல்கள் மற்றும் கடல்பசு போன்ற பல்லுயிர் வளம் மிகுந்து காணப்படுகிறது. மேலும் 280 வகை கடற்பஞ்சுகள், 92 வகை பவழங்கள், 22 வகை கடல் விசிறிகள், 160 வகை பலசுணைப்புழுக்கள், 35 வகை இறால்கள், 17 வகை நண்டுகள், 7 வகை கடற்பெருநண்டுகள், 17 வகை தலைக்காலிகள் மற்றும் 103 வகை முட்தோலிகள் காணப்படுகின்றன.

அச்சுறுத்தல்கள்    
தொகு
முறையற்ற கடற்புற்கள் சேகரிப்பு மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக பவழத்திட்டுகளை அழித்தல் போன்ற செயல்பாடுகள் காப்பகத்திற்கு பெரும் அச்சுறுததல்களாகும். மனிதனின் செயல்பாடுகளால் இதுவரை 65 விழுக்காடு பவழத்திட்டுகள் அழிந்துவிட்டன.


கடலில் ஒரு பூங்கா:

தமிழகத்தின் தெற்குக் கடலோர வளைகுடாவில் துவங்கி, இலங்கையின் தலைமன்னார் பகுதி வரையில் விரிந்துள்ள கடற்பகுதிக்கு 'மன்னார் வளைகுடா' என்று பெயர். இந்த வளைகுடாவில் அமைந்துள்ள, ராமநாதபுரம் தூத்துக்குடி கடற்கரைப் பகுதிகளில் 21 தீவுகள் இருக்கின்றன. 0.25 ஹெக்டேர் முதல் 125 ஹெக்டேர் பரப்பளவில் இருக்கும் இந்தத் தீவுகளைச் சுற்றி, 117 வகையான பவளப்பாறைகள் காணப்படுகின்றன. இவை 94.3 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்த ஒரு பெரிய பவளப்பாறை தொகுப்பை ஏற்படுத்துகின்றன. இந்தப் பகுதியில் ஆக்ஸிஜன் உற்பத்தி அதிகமாக இருப்பதால், மீன் உட்பட பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் அதிக அளவில் இங்கு வசிக்கின்றன. இந்தியாவில் இருக்கும் 2,200 துடுப்பு வகை மீன்களில், 510 மீன்கள் இங்கு இருக்கின்றன. மீன்கள் மட்டுமன்றி, 79 கணுக்காலிகள் (Arthropods), 108 புரையுடலிகள் (Poriferans), 260 மெல்லுடலிகள் (Molluscs), 100 முட்தோலிகள் (Echinoderms), 147 கடற்பாசி வகைகள், 160 கடற்பறவை இனங்கள் மற்றும் ஏராளமான அரியவகை கடல்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடமாக இருக்கிறது.
உலகின் வளம் மிக்க கடல் பகுதிகளில் மன்னார் வளைகுடா முக்கியமானது. அதனால், யுனெஸ்கோ அமைப்பு இதைக் கடல்சார் பூங்காவாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. அதன் விளைவாக இந்திய அரசு 1989ல், தூத்துக்குடியில் இருந்து ராமேஸ்வரம் வரையிலான 560 சதுர கி.மீ. மன்னார் வளைகுடா பரப்பை, 'தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா' என்று அறிவித்தது.

கடலின் ஒரே சைவப் பாலூட்டி 'டியுடாங்' எனும் கடற்பசு. கடற்புல்லை மட்டுமே உண்டு வாழும் இந்த உயிரினம், உலகின் பிற பகுதிகளில் ஏறத்தாழ அழிந்துவிட்டாலும், மன்னார் வளைகுடாவில் காணப்படுகிறது .