New blog posts

ஆணைமலையும் யானைகளும்

11 August, 2019 by Administrator

திரு.K.தங்கராஜ் உடுமலைப்பேட்டை , அவர்களின்...

Ram Surendhar Image

31 July, 2019 by Aasaitamil

View all blog entries →

நமது குறிக்கோள்

உலகில் மனிதன் மட்டும் தனித்து வாழ முடியாது!

இயற்கை படைத்த பிற உயிர்களோடும் சேர்ந்தே வாழவேண்டும்!

காடுகளும், காட்டுயிர்களும் இல்லாத உலகில் மனிதனும் இருக்க மாட்டான்!

 காடுகளையும், காட்டுயிர்களையும் பாதுகாக்கும் கரிசனத்தோடு

உலகெங்கும் உள்ள மக்கள் அதை அடுத்த தலைமுறைக்கும் பாதுகாத்து கொடுக்க வேண்டும்.


 

குழந்தைகளுக்கான கல்வியில் காடுகள்

நதிகளுக்கும் நிலத்திற்கும் உயிருண்டு என்பதை புரிய வைக்கும் கல்வி குழந்தைகளுக்கு வேண்டும்.

மனிதர்களுக்கு அருகில் , எளிய மனிதர்களுக்கு அருகில் , வாழ
வக்கற்றுப்போய்க்கொண்டிருக்கும் சாமானியர்களுக்கு அருகில் அழைத்துச் செல்லும் கல்வி குழந்தைகளுக்கு வேண்டும்.  

நகரம், வளர்ச்சி, தொழில்நுட்பம் போன்றவை மனநோயாளிகளையும் பொறுப்பற்ற
நுகர்வுக் கலாச்சார அடிமைகளையும் உற்பத்தி செய்து வருவதை ஆழ்ந்து பேசக்கூடிய
கல்வி குழந்தைகளுக்கு வேண்டும்.

குழந்தைகளுக்கு பழங்குடிகள், கலைஞர்கள் மற்றும் இயற்கையிடமிருந்து கற்பதே வாழ்வு
என்பதை நம்பும் கல்வி வேண்டும் ,

பேராசை நோய்கொண்ட ஊடகங்கள், அரசுகள் மற்றும்பெருமுதலாளிகள் கண்ணுக்குத் தெரியாத வன்முறைகளை பூமியில் உள்ள அனைத்து
உயிரினங்களுக்கு எதிராகவும் தினமும் நிகழ்த்துகின்றன என்பதை மனதில் பதிய வைக்கும்
கல்வி குழந்தைகளுக்கு வேண்டும்.

நாம் தரமான அடிமைகளாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறோம் என்பதையும், கல்வி
என்றால் என்னவென்று நாம் அறியாத வண்ணம் மறைக்கப்பட்டிருக்கிறது என்பதையும்
விரிவாகப் பேசும் கல்வி குழந்தைகளுக்கு வேண்டும்.

கரிசல் மண்ணில் ஒரு சிறுவனோடு நடக்கையில் எதிரில் வந்து நின்ற மண்புழுவை
கவனித்து மண்ணோடு அள்ளி புல்புதருக்குள்விட்ட ஆன்மாவை சிதைக்காத கல்விதான் நமக்கும் குழந்தைகளுக்கும் வேண்டும்...

" சினுக்கு சிட்டான் சிட்டுகுருவிக்கு காய்ச்சல் அடிச்சிச்சாம்
பக்கத்துக்கு வீட்டு பஞ்சு சிட்டு பதறி வந்துடுச்சாம்
தேன் சிட்டு தங்கச்சிக்கு சேதி போய்டுச்சாம்
துடிச்சிப் போய் அதும் வந்து துணைக்கு குந்திகிச்சாம்
ஊசி தட்டான் டாக்டர் வந்து ஊசி போட்டாரு
காசு வாங்க மறந்து அவரு பறந்து போனாரு "...

இப்படி வித விதமாய் பாட்டு பாடி மற்ற உயிரினகளோடு விளையாடிய நம் பிள்ளைகள் இப்போது கொசு பேட்டில் கொசு அடித்து விளையாடிக் கொண்டிருக்கிறது ,
அடுத்த தலைமுறைக்கு உயிரனங்களை நேசிக்க கற்றுக் கொடுக்காமல் இல்லையென்றாலும் பரவாயில்லை குறைந்தபட்சம் வெறுக்காமல் இருக்க கற்றுக் கொடுத்தால்கூடப் போதும் .


என் நண்பர் தியோடர் பாஸ்கர் அழகாய் சொல்வார்
பிடி,களிறு,வேழம்,கொம்பன் என்று பலவிதமான பெயர்களை யானைக்கு வைத்த தமிழனின் பிள்ளைகள் அந்த மரபுச் செல்வம் பற்றி அறியாது ஆங்கிலத்தில் படித்துக் கொண்டு இருக்கிறார்கள் .

இங்கிலாந்தில் இல்லாத உயிரினமான யானையைக் குறிக்க elephant என்ற ஒற்றை சொல் மட்டுமே இருக்கிறது.புலியைக் குறிக்க மட்டுமே 11 சொற்கள் நம்மிடம் இருகின்றன , நூறுக்கும் அதிகமான பூக்களின் பெயர்களை பட்டியலிட்டு குறிஞ்சிப் பாட்டு எழுதியவர்களுக்கு , இன்று சுற்றுப் புறச் சூழலை தெரிந்துகொள்ள துறைச் சொற்கள் இல்லாமல் ஆங்கிலத்திடம் கடனாளியாக கடன் வாங்குகிறோம் .

அறிவியல் பூர்வமாக இயற்கையை போற்றிய தமிழரின் பிள்ளைகள் இன்று , ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களுக்கும் , தீம் பார்க்குகளுக்கும் பள்ளி சுற்றுலா போகும் அவலத்தை எங்கே சென்று முறையிடுவது , இயற்கையை அறிந்துக் கொள்ளாமல் இயந்திரங்களோடு வாழ்வதால் உற்சாக பானங்கள் ஏராளமாக விற்பனை ஆகின்றன .


டால்பினை வெளிநாட்டு உயிராக பார்க்கிற நமக்கு அதை ஓங்கில் என்று நம் முன்னோர்கள் அழைத்த விவரம் தெரியாது ,
இனியாவது நம் பிள்ளைகளுக்கு தமிழில் உயிரினங்களை கற்றுக்கொடுப்போம் ...

ஒரு கோயிலோ , சர்ச்சோ , மசூதியோ சிறுவனுக்கு கற்றுக்கொடுப்பதை விட காடு நிறைய கற்றுக்கொடுக்கும்.-.ஓஷோ..
ஆம் ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் ஆடுமேய்த்துக்கொண்டிருக்கும் போது அவனிடம் நானும் பேசிக்கொண்டு வந்தேன் அங்கு எறும்புச்சிங்கவலைகள் (Antlion) இருந்ததைக்கண்டேன் , அவனிடம் இது என்ன என்று கேட்டதற்கு அதைப்பற்றி உடனே விளக்குகிறான் .

காடுகள் , பூச்சி , விலங்கு , தாவரம் , மண்தன்மை , மழை என இயற்கை அறிவை அவனுக்குக்கற்றுத்தருகின்றன , நகரச்சிறுவருக்கு அந்த அறிவு இல்லை , அவனைக்காடு தையரியமாகவும் , இயற்கை அறிவுடனும் வளர்த்தெடுக்கிறது .

அவன் மரத்தண்டில் இருந்த சில்வண்டை (Cicada)இனம் கண்டு சொல்கிறான் , சென்ற பதிவைப்படிக்காமல் வெறுமனே படம் பார்த்துச்செல்பவர்களுக்கு இப்போது என்ன விளங்கும் படம் பார்ப்பது சிறுவர் வேலை , வளர்ந்தவர் நிறையப்படிக்க வேண்டும் .

சிக்கடாவுக்கு தமிழில் சில்வண்டு எனப்பெயர். நம்முன்னோர்,’ஏண்டா சில்வண்டு மாதிரி கத்தறே ?’ என்று இயற்கையில் காணும் பூச்சியை உதாரணம் கொடுக்கின்றனர் , அந்த சிறுவன் தையரியமாக எறும்புச்சிங்க வலையை அடியோடு வாரியெடுத்து உள்ளங்கை வைத்துக்காட்டுகிறான் , சிக்கடா பிடித்துக்காட்டவா ?
சின்னான்கள்(BulBuls)கீச்சான்(Shrike),செண்பகம்(Coucal),தேன்சிட்டுகள்(Sunbirds),கவுதாரி(Grey Partridge), ஈப்பிடிச்சான்கள்(Bee eaters) பரவசம் கூட்டின , பிறகு அந்த சிறுவன் தன் பெயர் சொல்லாமலேயே அவசரமாய் ஓடி விட்டான்....