New blog posts

அழிவின் விளிம்பில் காட்டின் பேருயிர்

2 June, 2020 by Administrator

அழிவின் விளிம்பில் காட்டின் பேருயிர்...

ஜுன் - 5 சுற்றுச்சூழல் தின கட்டுரைகள் அனுப்புவதற்கான விதிமுறைகள்

26 May, 2020 by Administrator

ஜுன் - 5 சுற்றுச்சூழல் தின கட்டுரைகள்...

Corona Awareness
Corona Awareness

28 March, 2020 by Administrator

www.kaadugal.com - Corona Awareness Image

World Water Day
World Water Day

22 March, 2020 by Administrator

www.kaadugal.com - World Water Day Post

தருமபுரி தமிழர் மரபுச் சந்தையில் , சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

12 January, 2020 by Administrator

தர்மபுரி மக்கள் மன்றம் & தருமபுரி கலை...

ஆணைமலையும் யானைகளும்

11 August, 2019 by Administrator

திரு.K.தங்கராஜ் உடுமலைப்பேட்டை , அவர்களின்...

Ram Surendhar Image

31 July, 2019 by Aasaitamil

உலக புலிகள் தினம்

30 July, 2019 by Aasaitamil

உலக புலிகள் தின பதிவு

காடுகள் இணையதளத்தில் உறுப்பினராக ௮ழைப்பு

20 March, 2019 by Administrator

காடுகள் இணையதளத்தில் உறுப்பினராகி தாங்கள்...

காடுகள் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

20 March, 2019 by Administrator

காடுகள் இணையதளத்தை பார்வையிட...

காடுகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது

26 February, 2019 by Aasaitamil

காடுகள் இணையதளத்தை பார்வையிட வந்திருக்கும்...

View all blog entries →

நமது குறிக்கோள்

உலகில் மனிதன் மட்டும் தனித்து வாழ முடியாது!

இயற்கை படைத்த பிற உயிர்களோடும் சேர்ந்தே வாழவேண்டும்!

காடுகளும், காட்டுயிர்களும் இல்லாத உலகில் மனிதனும் இருக்க மாட்டான்!

 காடுகளையும், காட்டுயிர்களையும் பாதுகாக்கும் கரிசனத்தோடு

உலகெங்கும் உள்ள மக்கள் அதை அடுத்த தலைமுறைக்கும் பாதுகாத்து கொடுக்க வேண்டும்.


 

கோயில் காடுகளால் ஏற்படும் நன்மைகள்

கோயில் காடுகளால் மழை வளம் அதிகரிக்கும்
 
கோயில் காடுகளால் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது
 
மரம், செடி, கொடிகளின் கிளைகள் , இலைகள் உதிர்ந்து , மக்குவதால் மண்ணின் வளம் அதிகரிக்கிறது .
 
மேலும், பல்வகை விலங்குகள் , பறவைகளுக்கு தங்குமிடமாக கோயில் காடுகள் விளங்குவதுடன் , அவற்றுக்குத் தேவையான உணவும் இங்கேயே கிடைக்கிறது .
 
கோயில் காடுகளில் பறவைகள், விலங்குகள் மூலம் விதைப் பரவல் அதிகரிப்பதால் , இயற்கையிலேயே தாவரங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரிக்கிறது .
 
பல்வகை மருத்துவ குணம் கொண்ட மூலிகைத் தாவரங்களின் இருப்பிடமாகவும் கோயில் காடுகள் திகழ்கின்றன. இந்தத் தாவரங்கள் காற்றிலுள்ள மாசுக்களின் அளவை வெகுவாகக் குறைத்து , மக்கள் உயிர் வாழத் தேவையான பிராண வாயுவை அதிகளவில் வெளியிடுகின்றன , இதன்மூலம் கிராமங்களில் நீர் , நிலம் , காற்று , பல்லுயிர் வளங்கள் பாதுகாக்கப்படுகின்றன .
 
இந்த காடுகள் காடுவளத்தை பாதுகாக்கவும் , பல்லுயிர் உணவுச் சங்கிலியை  தொடர்ந்து முன் எடுத்துச்செல்லும் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன . 
 
இந்தியாவை பொருத்தமட்டில் வனப்பகுதியில் 14,000-க்கும்

மேற்பட்ட இவ்வகை " கோயில் காடுகள் " பரவிக் காணப்படுகின்றன.

நாட்டிலேயே அதிகப்படியாக இமாச்சலப் பிரதேசத்தில் 5,000-க்கும் மேற்பட்ட கோயில் காடுகளும் , அதற்கு அடுத்தப்படியாக கேரளத் தில் 2,000-க்கும் மேற்பட்ட கோயில் காடுகளும் , தமிழகத் தில் 550 கோயில் காடுகளும் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளன .

முதலில் கடவுளின் பெயரால் பாதுகாக்கப் பட்ட இந்த வனப்பகுதிகளில் வேட்டை கும்பல் , மரம் வெட்டும் கும்பல் நுழைய அச்சமடைந்ததால் ஆரம்பகாலத்தில் வேட்டையாடுதல் , மரம் வெட்டுதல் போன்றவை தடுக்கப்பட்டன , அதனால், இந்த காடுகள் இன்றளவும் மருத்துவத் தாவரங்களின் களஞ்சியமாகவும் , பழமரங்கள் , தேன் மற்றும் அங்கு வாழும் வன உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும் இருந்தன .

 
இந்நிலையில் நாகரிக வளர்ச்சி யால் முன்னோர் வழிபட்ட இக் கோயில் காடுகள் அழிந்து வரு கின்றன , அவற்றால் பாதுகாக் கப்பட்ட வனப்பகுதிகளும் , அந்த வனப்பகுதிகளில் காணப்பட்ட 100-க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்களும் அழியும் தருவாயில் உள்ளதாக உயிரியல் துறை ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது .
 
இதற்கு காரணங்கள் பல என்றாலும் முக்கியமானவை , வேளாண் சமூகம் தொழிற் சமூகமாக மாற்றமடைவதே ஆகும்.
இதனால் மரபுசார்ந்த இயற்கைத்தெய்வங்கள் வாழ்கையில் இருந்து அன்னியமாதல் நடைபெருகிறது .
 
வேளாண் நிலங்கள் குடியிருப்புகளாகவும் , சிறப்பு பொருளாதார மண்டலங்களாகவும் , புறநகர்களாகவும் மாற்றமடையும் நேரத்தில் இக்காடுகள் காணாமல் போகின்றன , இது பல நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்த பல்லுயிரியத்தை அழிவுக்கு நகர்த்துகிறது.
 
குழந்தைகளே உங்கள் தலைமுறையாவது இந்தக் கோயில் காடுகளை பாதுகாக்குமா ?

Comments