New blog posts

அழிவின் விளிம்பில் காட்டின் பேருயிர்

2 June, 2020 by Administrator

அழிவின் விளிம்பில் காட்டின் பேருயிர்...

ஜுன் - 5 சுற்றுச்சூழல் தின கட்டுரைகள் அனுப்புவதற்கான விதிமுறைகள்

26 May, 2020 by Administrator

ஜுன் - 5 சுற்றுச்சூழல் தின கட்டுரைகள்...

Corona Awareness
Corona Awareness

28 March, 2020 by Administrator

www.kaadugal.com - Corona Awareness Image

World Water Day
World Water Day

22 March, 2020 by Administrator

www.kaadugal.com - World Water Day Post

தருமபுரி தமிழர் மரபுச் சந்தையில் , சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

12 January, 2020 by Administrator

தர்மபுரி மக்கள் மன்றம் & தருமபுரி கலை...

ஆணைமலையும் யானைகளும்

11 August, 2019 by Administrator

திரு.K.தங்கராஜ் உடுமலைப்பேட்டை , அவர்களின்...

Ram Surendhar Image

31 July, 2019 by Aasaitamil

உலக புலிகள் தினம்

30 July, 2019 by Aasaitamil

உலக புலிகள் தின பதிவு

காடுகள் இணையதளத்தில் உறுப்பினராக ௮ழைப்பு

20 March, 2019 by Administrator

காடுகள் இணையதளத்தில் உறுப்பினராகி தாங்கள்...

காடுகள் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

20 March, 2019 by Administrator

காடுகள் இணையதளத்தை பார்வையிட...

காடுகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது

26 February, 2019 by Aasaitamil

காடுகள் இணையதளத்தை பார்வையிட வந்திருக்கும்...

View all blog entries →

நமது குறிக்கோள்

உலகில் மனிதன் மட்டும் தனித்து வாழ முடியாது!

இயற்கை படைத்த பிற உயிர்களோடும் சேர்ந்தே வாழவேண்டும்!

காடுகளும், காட்டுயிர்களும் இல்லாத உலகில் மனிதனும் இருக்க மாட்டான்!

 காடுகளையும், காட்டுயிர்களையும் பாதுகாக்கும் கரிசனத்தோடு

உலகெங்கும் உள்ள மக்கள் அதை அடுத்த தலைமுறைக்கும் பாதுகாத்து கொடுக்க வேண்டும்.


 

ஆணைமலையும் யானைகளும்

Posted on 11 August, 2019 by Administrator

திரு.K.தங்கராஜ் உடுமலைப்பேட்டை ,

அவர்களின் கட்டுரை

 

              ஆணை மலையும் யானைகளும்

 

மழையின் முக்கியத்துவத்தை உலகின் அனைத்து உயிரிணமும் உணர்ந்துள்ளன  , நாம் உட்பட...!?  

 

   உலகிலேயே மிக அதிகமாக மழை பெறும் பகுதியான மவ்ஸின்ராம் மற்றும் சிரபுஞ்சி பகுதிகளை கொண்டதால்  நமது இந்திய பூமி இன்னும் புண்ணிய தேசமாகிறது,.;  

இயற்கை அண்ணையின் இதயத் துடிப்பாக விளங்கும் உலகப்புகழ்பெற்ற பசுமை மாறாக்காடுகளை அதிகளவில் கொண்டுள்ள தேசம் நமது இந்தியா..

பசுமை மாறாக்காடுகள் என்ற பெயர் காரணம் மிக எளிதானதன்று . நூற்றாண்டுகளாக தொடர் மழையாலும் சிறந்த மண் வளம் மற்றும் சீதோஷ்ன நிலைகளின் மாறாத சூழ்நிலை இருந்திருந்தால் மட்டுமே பசுமை மாறா காடுகள் உருவாக முடியும், பசுமை மாறாக்காடுகள் என்ற பெயரும் வந்துருக்கும். ஒரு காடு உருவாதல் என்பது சிறு செடி முளைப்பது போன்ற விஷயமல்ல,  அது மாபெரும் உயிரியல் சுழற்சி(biological circle) மற்றும் தாவரவியல் கொள்கை.(bottonical ethics)மழையும், மண் வளமும் முக்கியமே ஆனாலும்  பல ஆயிரம் சதுர கிலோமீட்டரில் காடுகள் உருவாக வேண்டுமெனில் மிகவும் வலிமையான தாவரவியல் சுழற்சி  அமைய வேண்டும்

விதை பரவுதல்

       ↕

மண்வளம் பரவுதல்

       ↕

 

உயிர்சத்துக்கள் பரவுதல்   

போன்ற அதி முக்கிய தாவரவியல் செயல்பாடுகள் தொடர்ந்து நடந்தாலன்றி காடுகள் உருவாக முடியாது,  சிறு எறும்புகள் முதல் அணில்கள் , குருவிகள், பறவைகள் மற்றும் காட்டு ஆடு மாடுகள் மிக முக்கியமாக யானைகள் போன்ற உயிரினங்களின் தொடர் பங்களிப்புகள் இருந்திருக்கிறது.தொடர்ந்து பறவைகளாலும் விலங்குகளாலும் தமது எச்சங்கள் மூலம் நீண்ட நிலப்பரப்புகளுக்கு விதைகள் பரப்ப பட்டதன்  மூலமே காடுகள் பெருகி இருக்கின்றன..

 

நமது தேசத்தில் மட்டுமல்ல உலக அளவில் முக்கியமான மலைத்தொடர்களில் ஒன்றான நமது மேற்குத்தொடர்ச்சி மலை, அதன் மிக புகழ் பெற்ற கோடைவாசஸ்தல பகுதிகளான உதகைமண்டலம் ஊட்டி , நீலகிரி , கொடைக்கானல் , டாப்ஸ்லிப், வால்பாறை மற்றும் நமது உடுமலையிலிருந்து கூப்பிடு  தூரத்தில் உள்ள சின்னாறு ,மறையூர், அட்டகட்டி காடு போன்ற பகுதிகள் மிக அரிய வகையான மூலிகைகளையும் கொண்டுள்ளது,,

உடுமலை , பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் இன்றும்  விடியல் நேரங்களில் நாம் இதமாக அனுபவிக்கின்ற சுத்தமான குளிர் காற்று வீசுவதற்கான காரணம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இயற்கை அண்ணை நமக்காக உருவாக்கி இருக்கிறாள், பெருங் காடுகளாக மேற்குத்தொடர்ச்சி மலையாக பரவி இருக்கிறாள்,,

ஆனால் ஓர் உண்மையை நாம் இன்று புரிந்து கொள்ள வேண்டும்,

கடந்த 20 ஆண்டு காலமாக நமது பகுதிகளில் மாறி வரும் சீதோஷ்ண நிலையை நாம் உணர்கிறோமா ?

சென்ற ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டு என்ற கணக்கில் சற்றே பின்னோக்கி பார்த்து ஒப்பிட்டால் நமது பகுதிகளில் மழை அளவு குறைந்திருப்பதையும் , சற்றே வெப்பம் அதிகரிப்பதையும் உணர்கிறோமா?

சரி இருக்கட்டும்

நமது பகுதிக்கு ஆனைமலை என்ற பெயர் பெற காரணம், மேற்குத்தொடர்ச்சி மலைக் காட்டு யானைகளின் வசிப்பிடம் மற்றும்

                                                          2

 

வாசஸ்தலமாக அதிக அளவில் காட்டுராஜாக்களாக வலம் வந்த யானைகளின் எண்ணிக்கையை கொண்டே அப்பகுதிக்கு ஆனைமலை என்ற பெயர் வந்தது .. ஆனால்  

கடந்த 10 ஆண்டுகளில் மிக சமீபமாக ரயில் விபத்துகளில் மற்றும் பிற காரணங்களால்

(இயற்கையான மரணமல்லாது)  இறந்துவிட்ட யானைகளின் எண்ணிக்கை     சுமார்  300 க்கும் அதிகம்

சரி எதற்காக இந்த யானை கதை..?

நமது பகுதியில் இவ்வளவு அருமையான காடுகளும் இந்த குளுகுளு சீதோஷ்ண நிலையும்  உருவாக காரணமாக இருந்தவற்றில் யானைகளின் பங்கு 40 சதவீதம் இது சத்தியமான உண்மை...

எப்படி என்றால்

காடுகள் வளம்பெற்று செழித்து பரவச்செய்வதில் யானைகள் சிறந்த   விவசாயிகள்,

 சராசரியாக ஒரு யானை  ஒரு நாளிற்கு 200 கிலோ தாவரங்களை உண்ணும், 70 லிட்டர் தண்ணீர் அருந்தும், 15 சதுர கிலோமீட்டர் சுற்றி திரியும்,  அவை உண்கின்ற 200 கிலோ தாவரங்களில் இலை தலைகளோடு, விதைகள்,

கொட்டைகள் அனைத்தும் அடங்கும்,   200 கிலோ தாவரங்களில் சுமார் 25 கிலோ விதைகளும் கொட்டைகளும் இருக்கும் அதன் சாணத்தின் மூலமாக சுமார் 15கிலோ விதைகளும் கொட்டைகளும் தினந்தோறும் 15 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் விதைக்கப்பட்டன (சான்று இன்றைய காடுகள் )

அதன் சாணத்திலிருந்து (35  கிலோ ஒருமுறைக்கு ) வீரியமான சாண உயிர் உரம் (  today bio organic fertilize ), மண்ணிற்கு தேவையான மணிச்சத்து மற்றும் தழைச்சத்து ஊட்டம் தருவதில் இந்த சாணத்திற்கு இணையானது

                                                              3

 

இல்லை (உலகின் எந்த தொழிற்சாலையும்,எந்த  வேதி பொருளும் தர முடியாது )..

இவ்வாறாக  காடுகள் உருவாவதில் ஒருயானையின் பங்களிப்பு இந்தளவுயெனில் நமது வன பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான யானைகள் பல ஆண்டுகள் தொடர்ந்து நமது இயற்கை அண்ணைக்கு எத்துணை அளவு உரமும் விதை பரவுதலும் செய்து இவ்வளவு பெரும் பரப்பில் காடுகள்  உருவாக யானைகள் உதவியதின் அளவை அளக்க இறைவனால் மட்டுமே முடியும,

மேலும் மழைக்காலங்களில் மழை நீரோட்டத்தின் மூலம் ஆறுகளின் வழியாக அந்த வளமான மண்ணும் உரமும் நமது வயல்களிலும் பரவி இருந்தது,   முந்தய காலங்களில் விளைந்த தானியங்களும், உணவுப்பொருட்கள் அனைத்தும் அந்த சத்தான மண்னில் விளைந்தது அதனாலே அவ்வளவு ருசியும் ஆரோகியாமும் உள்ள உணவை உட் கொண்டு மக்கள் வாழ்ந்து இருந்தனர், ஆரோக்கியமான சமுதாயம் இருந்தது,  

இப்படியான இயற்கை காடு வளர்ப்பின்  அதி முக்கிய காரணிகளின் ஒன்றான காட்டுயானைகளை நாம் இழந்து கொண்டிருக்கிறோம், இறக்கின்ற ஒவ்வொரு யானையும் ஒரு சதுர கிலோ மீட்டர் காட்டிற்கு சமம் ,ஒருமனிதனால் தினந்தோறும் காடுகளில் கிலோ கணக்கில்   விதைகளை பரப்பவோ வலிமையான இயற்கை உரங்கள் வழங்கவோ இயலாது , யானைகள் தொடர்ந்து இறக்குமாயின் காடுகளும் தொடர்ந்து அழிந்து விடும் காடுகளை மீண்டும் உருவாக்க பல நூற்றாண்டுகள் தேவைப்படும், அதுவரையிலும் நமக்கு மழை கிடைக்காது நீர் ஆதாரம் இன்றி ஒரு செடி கூட வளராது ஏனெனில் காடுகள் இன்றி மழை இல்லை மழை இன்றியும் காடுகள் இல்லை, தொடர்ந்து மழை இல்ல என்றால் மனித இனம் இருக்க முடியாது என்பதை அனைவரும் நன்கு அறிவோம்

ஏன் இன்று நாம் சுவையாக குடித்து மகிழும் திருமூர்த்தி ஆற்றின் நீருக்கான சுவை அந்த நீரில் கலந்திருக்கும் வளமான மண்  மற்றும் மலைத்தொடர்களில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள

                                                         4

 

ஆரோக்கியமான மரங்களும் தாவரங்களுமே காரணம் என்பதை அறீவிர்களாக, ஆனால் நாம் இன்று பாட்டில் தண்ணீருக்கு மாறிவிட்டோம்

ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாள் மனிதர்களுக்கு இவ்வளவு ஆரோக்கிய குறைவு ஏற்பட்டது இல்லை கரணம் நம் ஆரோக்கியமான மண்ணில் விளைந்த  இயற்கையான உணவுகள்

இன்று நாம் உண்பதெல்லாம் வேதியல் உருவாக்கிய உரங்களால் விளையும் அரிசியும் பூச்சிக்கொல்லி  (வௌவ்வால்களை நாம் விரட்டிக்கொண்டிருக்கிறோம் ஆனால் அவைகள் காலம் காலமாக விவசாயத்திற்கு செய்யது வரும் சேவை மிக முக்கியமானது இன்று நாம் பூச்சி கொல்லி மருந்துகளை தெளித்து பயிர்களை விஷமாக்கி கொண்டிருக்கின்றோம் ஆனால் வௌவால்கள் மிக சிறந்த பூச்சி கொல்லிகள், அவை வசிக்கும் மரங்களை வெட்டி சாய்த்துவிட்டு இன்று நம் வௌவால்களை குற்றம் சொல்லிக்கொண்டிருக்கின்றோம், நாளைய தலைமுறையினருக்கு அதன் மீது ஒரு பயம் மட்டுமே இருக்கும் அதன் நண்மைகள் தெரியாது  ஒரு நாள் அந்த இனமும் இல்லாது போகலாம்) தெளிக்கப்பட்ட ரசாயண காய்களும் பழங்களும் இவற்றில் ருசியும் இல்லை ஆரோக்கியமும் இல்லை,  

இந்த நிலை மாற நேரடியாகவோ மறைமுகமாகவோ காடுகள் முக்கியம்  , யானைகள் மட்டுமல்ல வரையாடுகள் , நீலகிரி தார் , பறவைகள் போன்ற அணைத்து உயிரினங்களும்,  இயற்கையை  வளர்ப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றன ஆனால் நாம் ஏனோ இயற்கையை அழித்து வாழ்வு தேடிக் கொண்டிருக்கிறோம்,

 

நமது உடுமலை பகுதியில் சீதோஷ்ண நிலை மேலும்  மாறாமல் தடுக்க நாம் ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற ஒரு செயல் செய்வோம் , அது மரம் நடுதல்  , மழை நீர் சேகரித்தல்  அல்லது காடுகளுக்குள் பிளாஸ்டிக் பொருட்களை வீசாமல் இருத்தல், பறவைகளுக்கு நீர் வைத்தல் , நம் குழந்தைகளுக்கு இயற்கையின் முக்கியத்துவம் , காடுகளின் இன்றியமையாமை பற்றி சொல்லிக்குடுத்தல் ஆகிய ஏதேனும் ஒன்றை செய்வோம் , தொடர்ந்து உடுமலையில் சீதோஷ்ண நிலையை சந்தோசமாக அனுபவிப்போம்...

காடுகள்.காம்

www.kaadugal.com 

No tags added.

Comments