New blog posts

அழிவின் விளிம்பில் காட்டின் பேருயிர்

2 June, 2020 by Administrator

அழிவின் விளிம்பில் காட்டின் பேருயிர்...

ஜுன் - 5 சுற்றுச்சூழல் தின கட்டுரைகள் அனுப்புவதற்கான விதிமுறைகள்

26 May, 2020 by Administrator

ஜுன் - 5 சுற்றுச்சூழல் தின கட்டுரைகள்...

Corona Awareness
Corona Awareness

28 March, 2020 by Administrator

www.kaadugal.com - Corona Awareness Image

World Water Day
World Water Day

22 March, 2020 by Administrator

www.kaadugal.com - World Water Day Post

தருமபுரி தமிழர் மரபுச் சந்தையில் , சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

12 January, 2020 by Administrator

தர்மபுரி மக்கள் மன்றம் & தருமபுரி கலை...

ஆணைமலையும் யானைகளும்

11 August, 2019 by Administrator

திரு.K.தங்கராஜ் உடுமலைப்பேட்டை , அவர்களின்...

Ram Surendhar Image

31 July, 2019 by Aasaitamil

உலக புலிகள் தினம்

30 July, 2019 by Aasaitamil

உலக புலிகள் தின பதிவு

காடுகள் இணையதளத்தில் உறுப்பினராக ௮ழைப்பு

20 March, 2019 by Administrator

காடுகள் இணையதளத்தில் உறுப்பினராகி தாங்கள்...

காடுகள் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

20 March, 2019 by Administrator

காடுகள் இணையதளத்தை பார்வையிட...

காடுகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது

26 February, 2019 by Aasaitamil

காடுகள் இணையதளத்தை பார்வையிட வந்திருக்கும்...

View all blog entries →

நமது குறிக்கோள்

உலகில் மனிதன் மட்டும் தனித்து வாழ முடியாது!

இயற்கை படைத்த பிற உயிர்களோடும் சேர்ந்தே வாழவேண்டும்!

காடுகளும், காட்டுயிர்களும் இல்லாத உலகில் மனிதனும் இருக்க மாட்டான்!

 காடுகளையும், காட்டுயிர்களையும் பாதுகாக்கும் கரிசனத்தோடு

உலகெங்கும் உள்ள மக்கள் அதை அடுத்த தலைமுறைக்கும் பாதுகாத்து கொடுக்க வேண்டும்.


 

அழிவின் விளிம்பில் காட்டின் பேருயிர்

Posted on 2 June, 2020 by Administrator

அழிவின் விளிம்பில் காட்டின் பேருயிர்

 

உலக சுற்றுசூழல் தின சிறப்பு கட்டுரை , ஜூன் 5 .. 

 

ஸ்லான் , ஒலிஃபன்ட் , நார்சு , ஃபில , ஜிலோனிஸ் , எலிஃபன்ட் , எலிவன்ட் , டிராம்ப்லிஸ் ,

என உலகம் முழுக்க வெவ்வேரு மொழிகளில் அழைக்கப்படும் ஓர் பெரு வனவிலங்கு யானை . இந்தியாவுக்கே உரிய வன விலங்கு. காடும் மலையும் நாடும் நடுவும் என மனிதன் தன்மானம் போற்றி மற்ற உயிரினங்களும் தானும் என வாழ்ந்த காலம் பொற்காலம்.

யானை என்ற பேருயிரின் இறப்பை கண்டும் காணாமல் இருக்கும் மனிதன் என்ற சிற்றுயிரின் ஆறாம் அறிவு என்பது படைப்பின் வெறுமை தானோ? என்ற கேள்வியோடு தொடங்குகிறேன் என் எழுத்தை...

 

இப்புவியின் மிகப்பெரிய நிலவாழ் உயிரி உயிர்விட தொடங்கும்போது இயல்பாகவே இப்புவி தன் இயலாமையால் முனங்குவதை கேட்டு இருக்கீறீர்களா? காட்டின் அரசன் சிங்கம் என்ற பொதுப்புத்தியில் இருந்து நகர்ந்து யானை தான் என்று காடே பிளிரும் பொழுது நம் முன்னூறு கிராம் மூளைக்கு உரைத்து இருக்கிறதா எதை வைத்து மனிதன் மட்டுமே ஆறறிவு என்று முடிவுக்கு வந்தோம்? என் அடுத்த சந்ததிக்கு யானை என்ற மிகப்பெரிய நிலவாழ் உயிரியை வெறும் புகைப்படத்தில் காட்டுவேன் என்றால் என் ஆறறிவு இருந்து என்ன பயன் என்ற சுயகேள்வியோடு தான் எழுதுகிறேன், என் எழுத்தாலான அத்தனை வரிகளையும்..

 

ஜூனிற்கு என்று பல சிறப்புகள் இருக்கிறது. அதில் சில ஜீன் 5 உலக சுற்றுசூழல் தினம், ஜூன் 7 உலக உணவு பாதுகாப்பு தினம், ஜூன் 8 உலக பெருங்கடல் தினம் , ஜூன் 16 உலக கடல் ஆமை நாள் .  இவை எல்லாம் வெறும் தினங்கள் அல்ல. அதே போல் ஒரு நாளைக்கான வெறும் கொண்டாட்டங்கள் அல்ல. இவை எல்லாம் மனித பொதுபுத்திக்கு சொல்லும் குறிப்புகள். உலகில் 1.5 மில்லியன் உயிரிகள் வாழ்கின்றன. அதில் ஒரு சராசரி மனிதனின் உடலில் மட்டும் 39 ட்ரில்லியன் உயிரிகள் வாழ்கின்றன. இதில் இரத்த அனுக்களின் எண்ணிக்கை மட்டும் 84 சதவிகிதம் என்று வைஸ்மென் என்ற ஆராய்ச்சியாளர் நிரூபித்து இருக்கிறார். இப்படி இருக்க, இந்த உலகிற்கு மனிதன் மட்டுமே ஒரே உயிரி என்ற பொய்யை மனிதனின் ஆறறிவு திரும்ப திரும்ப நம்பவைக்க முயற்சிப்பது என்பது எவ்வளவு பெரிய அபத்தம்..

 

உலகில் இரண்டு சதவிகித நிலப்பரப்பே இந்தியாவில் உள்ள போதிலும் எட்டு சதவிகித வன உயிரிகளுக்கு இந்தியா வாழவைக்கும் நிலப்பரப்பாக இருக்கிறது. இதில் இந்திய மண்ணை மட்டுமே பூர்வீகமாக கொண்ட உயிரிகளும் அடங்கும்.

 

உயிரிகளை பேசும் பொழுது என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது யானை. என் பேராசை எல்லாம் என் பிள்ளைக்கு பாரடா மகனே/மகளே இதுதான் இந்த நிலப்பரப்பின் மிகப்பெரிய நிலவாழ் உயிரி என்று என் ஆள்காட்டி விரலை யானை முன் நீட்டி காட்டி மார்தட்டிக் கொள்ள வேண்டும் என்பது தான். இதில் என்ன பேராசை இருக்கிறது என்ற கேள்வி எழலாம், ஆதியில் யானைகள் இருந்தன இப்படி ஒரு புத்தகம்.. புத்தகத்தை எழுதியவர் சூழலியல் எழுத்தாளர் ஐயா. கோவை சதாசிவம். ஓர் இடத்தில் எழுத்தாளர் இவ்வாறு கூறியிருப்பார் "இன்னும் பத்து அல்லது பதினைந்து வருடங்களில் யானை என்ற உயிரினமே இந்த புவியில் இருக்காது" என்று. அந்த புத்தகத்தை எத்தனை முறை படித்தாலும் என் மனதில் நிற்பது என்னவோ அந்த ஒரு வரி மட்டும் தான்..

 

இப்பொழுது சொல்லுங்கள் என் வருங்கால சந்ததிக்கு யானையை காட்டவேண்டும் என்ற என் கனவு ஆறறிவுகளின் மத்தியில் போராசை தானே? குறிப்பாக இன்று யானைகளை பற்றி அதிகம் பேசவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது மனித இனம். இனியும் தாமதித்தால் கடைசி யானை இறக்கும் பொழுது இந்த பூமி இதுவரை நாம் செய்த வன்புணர்ச்சியின் வலி தாங்கமல் தன் முடிவு நாளை எண்ண தொடங்கிவிடும்..

 

செப்டம்பர் 27 2019: செய்தி ஊடகம், சமூக வலைத்தளம், உலக வனவிலங்கு ஆர்வலர்கள், யானை காதலர்கள் என அனைவரையும் உறையவைத்த ஒரு கோர காணொளி கனத்த இதயத்தோடு பார்த்தவர்கள் பலர். பார்க்கவே முடியலயே சாமி என்று கண்ணீர் சொட்ட கடந்தவர் பலர். (சிலிகுரி - துப்ரி) இடையே ரயில் அடித்து போட்ட ஒரு யானையின் பிளிறல்! செப்டம்பர் 27ம் தேதி காலை 8.30 மணியளவில் பனார்ஹட் மற்றும் நாகிரகட்டா இடையே 75741 எஸ்.ஜி.யு.ஜே-டி.பி.பி (சிலிகுரி-துப்ரி) இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் அதன் வழக்கமான பாதையில், மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டம் வழியாக ஓடிக்கொண்டிருந்தது. காட்டில் உள்ள தடங்களை கடக்க முயன்ற யானையை அதிவேகமாக வந்த ரயில் தாக்கியது. இந்த தாக்கத்தால் விலங்கு பலத்த காயம் அடைந்தது. படுகாயமடைந்த யானை அந்த ரயிலின் என்ஜீனில் இருந்து எழுந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள முயற்சித்த காட்சி மனிதனாய் பிறந்ததற்கு அழுவதை தவிர வேறு ஏதும் சொல்வதற்கு இல்லை. 33 மணி நேர பெரும் வலிக்கு பின்னர் செப்டம்பர் 28ம் தேதி மாலை 5.30 மணி அளவில் இந்த உலகை விட்டு பிரிந்தாள் அந்த காட்டின் தாய்..

 

அதே 28 செப்டம்பர் 2019 கோவை போலுவம்பட்டி வன சரகத்தில் சிறுவாணி கல்கொத்தி மலைவாழ் பகுதி அருகில் உள்ள விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி 7 வயதே மதிக்கத்தக்க குட்டி யானை இறந்தது.

 

செப்டம்பர் 26 2019: இலங்கையின் பாட்டி யானை என்றும் உலக அரங்கில் தன் மெலிந்த தேகத்தால் உலகையே உலுக்கிய யானை டிக்கிரி இறந்தாள்..

 

இது எல்லாம் போன வருடத்து தரவுகள் இந்த வருடத்தின் நிலையே இன்னும் மோசம் எழுத துணிந்தால் நிச்சயமாக மூன்று பக்கம் போதாது .

 

இப்படி தினம் ஒரு யானையை பலி கொடுக்க இந்த மண்ணில் நாம் எத்தனை யானைகளை வைத்திருக்கிறோம் என்று தெரிந்தால் அழாத குறைதான்.

 

2012ம் ஆண்டு எடுத்த யானைகள் கணக்கெடுப்பின்படி 29,391 யானைகள் இருந்திருக்கின்றன. அதில் தென்னிந்தியாவில்தான் அதிகமாக யானைகள் இருந்திருக்கின்றன. ஆனால் கர்நாடகா, ஆந்திரா, கேரளாவை ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் யானைகளின் எண்ணிக்கை மிகக் குறைவு.

 

தமிழகத்தில் கடைசியாக 2017ம் ஆண்டு மே மாதம் யானை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் மொத்தமாக 2761 யானைகள் வனப்பகுதிகளில் இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கோவில்களில் 39 யானைகளும், தனியார் வசம் 38 யானைகளும், வனத்துறை முகாம்களில் 47 யானைகளும், பூங்காக்களில் 5 யானைகளும் இருக்கின்றன. பொதுவாக யானைகள் கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.  கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் நடந்த யானைகள் கணக்கெடுப்பின் படி மொத்தமாக 27,312 யானைகள் இருந்துள்ளன.

 

அதேபோல கடந்த 10 ஆண்டுகளில் 973 யானைகள் இறந்துள்ளன இந்திய வனபாதுகாப்பு சரகம் கொடுத்து இருக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட் இது.

 

இதில் தமிழகத்தில் நடந்த யானைகளின் மரணங்களை எண்ணிக்கையில் பார்த்தால்..

 

2018ல் இருந்து 2019 செப்டம்பர் வரை இயற்கை மரணத்தில் இறந்த யானைகளின் எண்ணிக்கை 2018ம் ஆண்டில் 72,  2019ம் ஆண்டில் 68, மின்சார தாக்குதலால் இறந்த யானைகளின் எண்ணிக்கை 2018ம் ஆண்டில் 11, 2019ம் ஆண்டில் 5, வேட்டையாடப்பட்டு இறந்த யானைகளின் எண்ணிக்கை 2018மா ஆண்டில் 1, 2019ம் ஆண்டில் 1 என மொத்தம் 2018ம் ஆண்டில் 84 மற்றும் 2019 செப்டம்பர் வரை 74..!

 

மேலே குறிப்பட்டதை வைத்து பார்த்தால் 2017ன் கணக்குப்படி தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2761. இப்படி வருடத்திற்கு 100 யானையை கீழடியின் ஆதிமனிதனின் மண்ணிலே யானைகளுக்கு இவ்வளவு அநீதி என்றால் யானைகளின் நிலையை இதற்கு மேல் உணர்த்த என்ன இருக்கிறது..?

 

காட்டு பகுதிகளை அபகரித்தல், யானைகளின் வாழ்விடங்களை அழித்தல், உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை என மனிதன் யானைகளின் மீது காட்டும் காதல் என்பது சுயநலத்தின் காழ்ப்புணர்ச்சி.

 

யானை தடங்களில் ரயில் பாதைகளை போடும் பொழுது அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் 30ல் இருந்து 40 கிமீ வேகத்தில் தான் இயக்கப்படும் என்ற ரயில்வே துறையின் உத்தரவாதங்கள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன. 75741 என்ற எண்ணைக் கொண்ட ரயில் ஏற்றிக் கொன்ற யானைக்கு என்ன பதில் சொல்லும் இந்திய ரயில்வே நிர்வாகம்?

 

தன் பயிர்களை காப்பதற்காக என்று சொல்லி மின்சார வேலியிட்டு யானையை கொன்ற அந்த மனிதனுக்கு எந்த தண்டைனை கொடுத்து இருக்கிறது இந்த மனித அரசாங்கம்? இயற்கை விவசாயம் என்ற பெயரில் தனக்கு 70 மற்றும் சுற்றி உள்ள உயிரிகளுக்கு 30 சதவிகிதம் என்று பகிர்ந்துண்டு பல்லுயிர் காத்த தமிழினம் இப்படி யானையை கொன்று வேடிக்கை பார்ப்பது சரியோ?

 

ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்! யானை காதலனாக ஒரு யானை கொல்லப்படும் போது இப்படி தான் இறந்தது என்று திரும்ப திரும்ப காட்டுவதை தவிர்த்து இவன் தான் கொன்றான் என்ற செய்திக்கு தாவுங்கள். முழுமுதற் கடவுள் தும்பிக்கை தூக்கி உங்களை ஆசிர்வதிப்பான். விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாய் கொண்டாடி தீர்த்த சக இந்திய குடிமக்களே ஆனைமுகத்தோன் உயிரோடுதான் இருக்கிறான். 130 கோடி கைகள் இருந்தால் இன்னும் நூறாண்டுக்கு ஆசையோடு பின் தொடர்ந்து செல்லலாம் இந்த நிலமுழுக்க யானைகளை...

 

தமிழ் பேசும் நல் உலகின் பாதம் தொட்டு வேண்டுகிறேன்.. காடுகள்.காம் வாயிலாக யானைகளை பாதுகாப்போம் வாருங்கள்....! இந்த சுற்றுச்சூழல் தினத்தில் இப்படியாக சபதம் ஏற்போம் ..

 

ஜெகதீஷ் ரவி ..

 

 

ஜெகதீஷ் ரவி 

சென்னை-5

No tags added.

Comments