New blog posts

ஆணைமலையும் யானைகளும்

11 August, 2019 by Administrator

திரு.K.தங்கராஜ் உடுமலைப்பேட்டை , அவர்களின்...

Ram Surendhar Image

31 July, 2019 by Aasaitamil

View all blog entries →

நமது குறிக்கோள்

உலகில் மனிதன் மட்டும் தனித்து வாழ முடியாது!

இயற்கை படைத்த பிற உயிர்களோடும் சேர்ந்தே வாழவேண்டும்!

காடுகளும், காட்டுயிர்களும் இல்லாத உலகில் மனிதனும் இருக்க மாட்டான்!

 காடுகளையும், காட்டுயிர்களையும் பாதுகாக்கும் கரிசனத்தோடு

உலகெங்கும் உள்ள மக்கள் அதை அடுத்த தலைமுறைக்கும் பாதுகாத்து கொடுக்க வேண்டும்.


 

அகத்திய மலை

 

பொதிகை -அகத்தியமலை உயிர்க்கோளக் காப்பகம் -

Agasthyamala Biosphere Reserve- ABR


2016ஆம் ஆண்டு மார்ச் 19ல் பெரு நாட்டில் அறிவிக்கப்பட்ட நெல்லை அகத்தியர் மலை உயிர்கோல மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கான சான்றிதழ்  தமிழக அரசிடம் யுனெஸ்கோ வழங்கியுள்ளது.


இது யுனெஸ்கோவின் மனிதனும், உயிரிக்கோளமும் திட்டம் என்பதில் அறிவிக்கப்பட்டு உலகின் 20 மிக்கியமான உயிர்க்கோளக் காப்பக பகுதிகளில் ஒன்றாக முன்மொழியப்பட்டுள்ளது.


இதன் பாதத்தில் தாமிரபரணி தவழ்கிறாள்.
இதை இன்றளவும் மிக கவனமாக பாதுகாத்து வரும் தமிழக வனத்துறை அலுவலர்களுக்கும் வனப் பணியாளர்களுக்கும் எம்முடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.


இனியாவது கேரள அரசு இங்கு ஆன்மிக பயணம் என்ற பெயரில் மக்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும்.பொதிகை உச்சி இரு மாநிலத்துக்கும் பொதுவே. இங்கு அகத்தியரை நிறுவி அதன் பக்கத்தில் பூசை என்ற பெயரில் போடப்படும் நெகிழிக் குப்பைகள் பொதிகை உச்சியையும் மாசு படுத்தியுள்ளது .


முட்புதர்க்காடு , ஈர இலையுதிர்க்காடு , பகுதி பசுமைமாறா காடுகளை உள்ளடக்கிய இந்த காப்பகத்தில் பல்லுயிர் வளம்மிகுந்து காணப்படுகிறது , பறவைகள் வளர்த்த அழகான வனம் இது ,    அடுத்த தலைமுறைக்கு இதையாவது விட்டு வைப்போம் .