குழந்தைகளின் கல்வியில் காடுகள்

 • நதிகளுக்கும் நிலத்திற்கும் உயிருண்டு என்பதை புரிய வைக்கும் கல்வி வேண்டும்.

 

 • மனிதர்களுக்கு அருகில், எளிய மனிதர்களுக்கு அருகில், வாழ
  வக்கற்றுப்போய்க்கொண்டிருக்கும் சாமானியர்களுக்கு அருகில் அழைத்துச் செல்லும் கல்வி வேண்டும்.

 

 • நகரம், வளர்ச்சி, தொழில்நுட்பம் போன்றவை மனநோயாளிகளையும் பொறுப்பற்ற
  நுகர்வுக் கலாச்சார அடிமைகளையும் உற்பத்தி செய்து வருவதை ஆழ்ந்து பேசக்கூடிய
  கல்வி வேண்டும்.

 

 • குழந்தைகள், பழங்குடிகள், கலைஞர்கள் மற்றும் இயற்கையிடமிருந்து கற்பதே வாழ்வு
  என்பதை நம்பும் கல்வி வேண்டும். பேராசை நோய்கொண்ட ஊடகங்கள், அரசுகள் மற்றும்பெருமுதலாளிகள் கண்ணுக்குத் தெரியாத வன்முறைகளை பூமியில் உள்ள அனைத்து
  உயிரினங்களுக்கு எதிராகவும் தினமும் நிகழ்த்துகின்றன என்பதை மனதில் பதிய வைக்கும்
  கல்வி வேண்டும்.

 

 • நாம் தரமான அடிமைகளாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறோம் என்பதையும், கல்வி
  என்றால் என்னவென்று நாம் அறியாத வண்ணம் மறைக்கப்பட்டிருக்கிறது என்பதையும்
  விரிவாகப் பேசும் கல்வி வேண்டும்.

 

 • கரிசல் மண்ணில் ஒரு சிறுவனோடு நடக்கையில் எதிரில் வந்து நின்ற மண்புழுவை
  கவனித்து மண்ணோடு அள்ளி புல்புதருக்குள்விட்ட ஆன்மாவை சிதைக்காத கல்விதான் நமக்கு வேண்டும்…