பழங்குடி மக்கள்

 

  • காடுகளை காடுகளாக வைத்திருப்பதில் பழங்குடியினர் பெரும்பங்கு வகிக்கின்றனர்.

 

  • பழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டோ பன்னெடுங்காலமாகவோ (10,000 ஆண்டுகளுக்கும் மேலாக), ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள்.

 

  • இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும் மொழியும் நிலமும் கொண்டு அதனைச் சார்ந்த செடி, கொடி, மரம், விலங்குகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தன்னிறைவோடு வாழ்பவர்கள்.

 

  • இவர்கள் தங்களுக்கென தனி கலைகளும் கடவுள், சமயம், மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும் கொண்டிருப்பர்.

 

  • தனி மனித வாழ்க்கையிலும், உறவு முறைகளிலும், குமுகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள்.

 

  • தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும், பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் இல்லாமலும், தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள், வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களுமாக இருக்கிறார்கள்.