ஊர்வன இனங்கள்

மெல்லுடலிகள்

  • மெல்லுடலிகள் (Mollusca) என்பது முதுகெலும்பற்ற விலங்குகளில் இரண்டாவது மிகப்பெரிய தொகுதி ஆகும். இதுவரை சுமார் 85,000 மெல்லுடலிகள் இனம் காணப்பட்டுள்ளன. இவை மிக மெலிதான ஓடுகளைக் கொண்டு இருக்கும்.[2].

 

  • மெல்லுடலிகளில் மொத்தம் 100,000க்கும் மேற்பட்ட இனங்கள் இருந்துள்ளதாக புதைப்படிவங்களின் மூலம் அறியமுடிகிறது. மேலும் 70,000க்கும் அதிகமான சிற்றினங்கள் அற்றுப்போய்விட்டன. முத்துச்சிப்பி, கணவாய் முதலியன மெல்லுடலி வகையைச் சேர்ந்தன. வகைப்பாட்டியலில் மெல்லுடலிகள் பொதுவாக பத்து வகுப்புகளாக பிரிக்கப்படுகின்றன. இவற்றில் இரண்டு வகுப்புகள் முற்றிலும் அற்றுப்போய்விட்டன.

 

  • மெல்லுடலிகள் முக்கியமான முதுகெலும்பற்ற விலங்குகளாகும். இவற்றுள் மிக மெதுவாக அசையும் நத்தை தொடக்கம் மிக வேகமாக நீந்தும் இராட்சத ஸ்குயிட்டுக்களும் அடங்குகின்றன. இவற்றின் உடல் பொதுவாக வழவழப்பானதாகவும், மென்மையானதாகவும் இருக்கும். பல இனங்கள் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்காக கல்சியம் காபனேற்றாலான ஓட்டைச் சுரக்கின்றன. இவற்றின் அடிப்பகுதியில் தசையாலான பாதமொன்று காணப்படும். ஒக்டோபசு போன்ற சீபலோபோடா விலங்குகளில் இப்பாதப் பகுதியே பல கைகளாகத் திரிபடைந்திருக்கும்.

 

  • மெல்லுடலிகளில் உணவுண்பதற்காகச் சிறப்பாகக் காணப்படும் உறுப்பு வறுகி (radula) ஆகும். இவை இவ்வுறுப்பைப் பயன்படுத்தியே உணவைக் கிழித்து உண்கின்றன. இவற்றின் குருதிச் சுற்றோட்டத் தொகுதி திறந்த தொகுதியாகும். மெல்லுடலிகளில் சீபலோபோடாக்களே மிகவும் சிக்கலான உடலியல் கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இவற்றில் பல கைகளுள்ளன, ஓடு பலவற்றில் காணப்படுவதில்லை, மூடிய குருதிச் சுற்றோட்டம் உள்ளது, கூர்மையான நன்கு விருத்தியடைந்த கண்களும், நன்கு விருத்தியடைந்த மூளை மற்றும் நரம்புத் தொகுதியும் உள்ளன. இதனால் கடலில் ஆட்சியுள்ள உயிரினங்களில் சீபலோபோடா வகுப்பைச் சேர்ந்த ஒக்டோபசு, இராட்சத ஸ்குயிட்டு போன்ற உயிரினங்களும் அடங்குகின்றன. எனினும் பொதுவாக மெல்லுடலிகளின் உடலியல் கட்டமைப்பு அவ்வளவாக சிக்கலானதல்ல. மெல்லுடலிகள் ஆதிகால மனிதனின் உணவில் முக்கிய பங்கு வகித்தன. எனினும் தற்காலத்தில் கணவாய், மட்டி போன்றவை உணவாக உட்கொள்ளப்படுகின்றன. மெல்லுடலிகளின் மிகப் பெறுமதியான முக்கிய பயன்பாடு முத்து ஆகும்.

இருவாழ்விகள்

  • நிலநீர் வாழிகள் அல்லது ஈரூடக வாழிகள் (இருவாழ்விகள் அல்லது நீர்நிலவாழ்வன; இலங்கை வழக்கு – ஈரூடகவாழிகள்; Amphibian) எனப்படுபவை நீரிலும் நிலத்திலும் வாழவல்ல முதுகெலும்பி வகையைச் சேர்ந்த விலங்குகள் ஆகும். தவளை, தேரை, குருட்டுபுழு போன்றவை இருவாழ்விகள் ஆகும்.

 

  • இவை குளிர் குருதி வகையைச் சேர்ந்த முதுகெலும்புடைய நான்கு கால்கள் அமைந்த இருவாழி வகுப்பைச் சார்ந்த விலங்குகள். தற்பொழுது வாழும் இருவாழ்விகள் அனைத்தும் இலிசாம்பிபியா எனும் உள்வகுப்பைச் சார்ந்தனவாகும். இவற்றின் வாழிடங்கள் தரைச் சூழல், புதர்ச் சூழல், மரச் சூழல், நன்னீர்ச் சூழல் ஆகிய சூழல் அமைப்புகளில் அமைகின்றன. இருவாழ்விகள் தம் வாழ்க்கைச் சுழற்சியை நீரில் வாழும் இளவுயிரிகளாகத் தொடங்குகின்றன. சில இருவாழ்விகள் இக்கட்டத்தைத் தவிர்க்கும் தகவமைப்பைப் பெற்றுள்ளன.

 

  • செவுள்களால் மூச்சுயிர்க்கும் இந்த இளவுயிரிகள் நுரையீரலால் மூச்சுவிடும் வளருயிரி வடிவத்துக்கு உருமாற்றம் அடைகின்றன. இவை துணை மூச்சுயிர்க்கும் பரப்பாகத் தோலைப் பயன்படுத்துகின்றன. சில தரைவாழ் சலமாண்டர்களும் தவளைகளும் நுரையிரல் இல்லாமலே தம் தோலால் மட்டுமே மூச்சுயிர்க்கின்றன. இவை புறவடிவில் பல்லிகளைப் போலவுள்ளன என்றாலும், இவை பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன போல முட்டையிடும் விலங்குகளாகும். எனவே, இனப்பெருக்கத்துக்காக நீரூடகம் ஏதும் தேவையற்றவை. இவற்றின் சிக்கலான இனப்பெருக்கத் தேவையும் புரையுள்ள தோலும் இவற்றைச் சூழல்நிலைகாட்டிகளாக ஆக்குகின்றன; அண்மைப் பத்தாண்டுகளில் உலகெங்கும் இருவாழி இனங்களின் தொகை அருகிவருகிறது.

 

  • மிகப் பழைய தொடக்கநிலை இருவாழிகள் நுரையீரலும் என்புமுள்ளால் ஆன துடுப்பும் அமைந்த இதழ்த்துடுப்பு மீன்களில் இருந்து தோன்றிப் படிமலர்ந்தனவாகும். இந்தக் கூறுபாடுகள் நில வாழ்க்கைக்கு ஏற்ற தகவமைப்புக்கு உதவின. இருவாழிகள் கரியூழிக் காலத்திலும் பெர்மியக் காலத்திலும் பல்கிப் பெருகி உலகெங்கும் ஓங்கலான வீச்சுடன் வாழ்ந்தன; ஆனால், பின்னர் இவை ஊர்வனவற்றாலும் முதுகெலும்பிகளாலும் பதிலீடு செய்யப்பட்டன. கால அடைவில், இருவாழிகள் அளவில் சுருங்கி, பன்முக வளர்ச்சியையும் இழந்தன. இப்போது இலிசாம்பிபியா உள்வகுப்பு சார்ந்த இருவாழிகள் மட்டுமே தப்பிப் பிழைத்துள்ளன.

 

  • புத்தியல்கால இருவாழிகள் மூன்று வரிசைகளில் அடங்குகின்றன; அவை தவளைகளும் தலைப்பிரட்டைகளும் அடங்கிய அனுரா வரிசை, சலமாண்டர்கள் அடங்கிய உரோடெலா வரிசை குருட்டுப்புழுக்கள் அடங்கிய அப்போடா வரிசை என்பனவாகும்.இருவாழ்விகளில் தோராயமாக 7,000 இனங்கள் அமைந்துள்ளன. இவற்றில் தவளை இனங்கள் மட்டுமே 90% அளவுக்கு அமைந்துள்ளன. உலகிலேயே மிகச் சிறிய இருவாழியும் முதுகெலும்பியுமான பயெடோபிரிய்னே அமுவென்சிசு (Paedophryne amauensis) எனும் தவளை இனம் நியூகினியாவில் வாழ்கிறது. இதன் நீளம் 7.7 மிமீ ஆகும். மிக நீண்ட வாழும் இருவாழ்வியாக ஆந்திரியாசு தேவிதியானசு (Andrias davidianus) எனும் சீனப் பெருஞ்சலமாண்டர் அமைகிறது. இதன் நீளம் 1.8 மீ ஆகும். இதுவும் 9 மீ நீளமுள்ள அழிந்துவிட்ட பிரியோனோசச்சசு (Prionosuchus) எனும் பிரேசில் நாட்டில் இடைநிலைப் பெர்மியக் காலத்தில் வாழ்ந்த இருவாழியின் குறுவடிவமே ஆகும்.

 

  • இருவாழிகளின் உடல், தலை, உடம்பு எனும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இவை வழுவழுப்பான ஈரமான தோலைக் கொண்டிருக்கும். இவற்றின் இதயம் மூன்று அறைகளைக் (இரு மேலறைகளும் ஒரு கீழறை யும்) கொண்டுள்ளது.