கோயில்  காடுகளால் ஏற்படும் நன்மைகள்

 

 

  • கோயில் காடுகளால் மழை வளம் அதிகரிக்கும்.

 

  • கோயில் காடுகளால் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. மரம், செடி, கொடிகளின் கிளைகள், இலைகள் உதிர்ந்து, மக்குவதால் மண்ணின் வளம் அதிகரிக்கிறது. மேலும், பல்வகை விலங்குகள், பறவைகளுக்கு தங்குமிடமாக கோயில் காடுகள் விளங்குவதுடன், அவற்றுக்குத் தேவையான உணவும் இங்கேயே கிடைக்கிறது. கோயில் காடுகளில் பறவைகள், விலங்குகள் மூலம் விதைப் பரவல் அதிகரிப்பதால், இயற்கையிலேயே தாவரங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரிக்கிறது.

 

  • பல்வகை மருத்துவ குணம் கொண்ட மூலிகைத் தாவரங்களின் இருப்பிடமாகவும் கோயில் காடுகள் திகழ்கின்றன. இந்தத் தாவரங்கள் காற்றிலுள்ள மாசுக்களின் அளவை வெகுவாகக் குறைத்து, மக்கள் உயிர் வாழத் தேவையான பிராண வாயுவை அதிகளவில் வெளியிடுகின்றன. இதன்மூலம் கிராமங்களில் நீர், நிலம், காற்று, பல்லுயிர் வளங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

 

  •  இந்த காடுகள் காடுவளத்தை பாதுகாக்கவும்,பல்லுயிர் உணவுச் சங்கிலியை  தொடர்ந்து முன் எடுத்துச்செல்லும் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன.

 

  • இந்தியாவை பொருத்தமட்டில் வனப்பகுதியில் 14,000-க்கும் மேற் பட்ட இவ்வகை ‘கோயில் காடுகள்’ பரவிக் காணப்படுகின்றன. நாட் டிலேயே அதிகப்படியாக இமாச் சலப் பிரதேசத்தில் 5,000-க்கும் மேற்பட்ட கோயில் காடுகளும், அதற்கு அடுத்தப்படியாக கேரளத் தில் 2,000-க்கும் மேற்பட்ட கோயில் காடுகளும், தமிழகத் தில் 550 கோயில் காடுகளும், காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளன. முதலில் கடவுளின் பெயரால் பாதுகாக்கப் பட்ட இந்த வனப்பகுதிகளில் வேட்டை கும்பல், மரம் வெட்டும் கும்பல் நுழைய அச்சமடைந்ததால் ஆரம்பகாலத்தில் வேட்டையாடு தல், மரம் வெட்டுதல் போன்றவை தடுக்கப்பட்டன. அதனால், இந்த காடுகள் இன்றளவும் மருத்துவத் தாவரங்களின் களஞ்சியமாகவும், பழமரங்கள், தேன் மற்றும் அங்கு வாழும் வன உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும் இருந்தன.

 

  • இந்நிலையில் நாகரிக வளர்ச்சி யால் முன்னோர் வழிபட்ட இக் கோயில் காடுகள் அழிந்து வரு கின்றன. அவற்றால் பாதுகாக் கப்பட்ட வனப்பகுதிகளும், அந்த வனப்பகுதிகளில் காணப்பட்ட 100-க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்களும் அழியும்தருவாயில் உள்ளதாக உயிரியல் துறை ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.இதற்கு காரணங்கள் பல என்றாலும் முக்கியமானவை, வேளாண்சமூகம் தொழிற் சமூகமாக மாற்றமடைவதே ஆகும். இதனால் மரபுசார்ந்த இயற்கைத்தெய்வங்கள் வாழ்கையில் இருந்து அன்னியமாதல் நடைபெருகிறது. வேளாண் நிலங்கள் குடியிருப்புகளாகவும், சிறப்பு பொருளாதார மண்டலங்களாகவும், புறநகர்களாகவும் மாற்றமடையும் நேரத்தில் இக்காடுகள் காணாமல் போகின்றன.இது பலநூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்த பல்லுயிரியத்தை அழிவுக்கு நகர்த்துகிறது.

 

  • குழந்தைகளே உங்கள் தலைமுறையாவது இந்தக் கோயில் காடுகளை பாதுக்குமா?